தற்போதைய சூழலில் கற்றல் குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது ஒன்றும் நிவர்த்தி செய்ய முடியாதகுறைபாடல்ல. முறையான பயிற்சி, தொடர் முயற்சி மூலம் சரி செய்ய முடியும் ஏன்பதனை அருணா கிரியேட்டிவ் மைண்ட் ஸ்கூல் நிரூபித்து வருகிறது ஏன்று சொன்னால் அது மிகையல்ல.
ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு தனித்திறன் உண்டு. அதுபோல் கற்றல் குறைபாடும், ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும். அதனை சரியான முறையில் கண்டறிந்து, அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு பயிற்சி அளித்தால் அவர்களின் குறைபாட்டை எளிதாக சரிசெய்ய முடியும். மேலும் அவர்களின் தனித்திறனை எக்குவித்து அவர்களை தலைசிறந்த மாணவனாக மாற்ற முடியும். இதனை நமது பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் ஓருங்கிணைந்து தன்னலமற்று சிறப்பாக செய்து வருகிறார்கள். அவர்களின் சேவை ஏல்லா திசைகளிலும் சென்றடைய எல்லாம் வல்ல இறை அருள் புரியட்டும்.
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
– திரு. சு. தனசேகரன்